200-மெகாபிக்சல் கமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2-ஆம் திகதி சீனாவில் அறிமுகமாகும் Moto X30 Pro 200 மெகாபிக்சல் பிரதான கமராவைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டோவின் ஃபிலாக்ஷிப் மொபைலான Moto X30 Pro ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மற்றும் 125W GaN வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வரும். Moto X30 Pro ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12-ல் இயங்கும் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும்.
Motorola, சமீபத்திய Weibo பதிவில் Moto X30 Pro 200 மெகாபிக்சல் பிரதான கமராவைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே 200 மெகாபிக்சலுடன் அறிமுகமாகும் முதல்
ஸ்மார்ட்போன் ஆகும்.
மேலும் X30 Pro ஸ்மார்ட்போன் 125W GaN ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Motorola நிறுவனம் சமீபத்தில் Moto X30 Pro-வில் சென்சார்களின் குவிய நீளத்தை உறுதிப்படுத்தியது. சென்சார்கள் 35 மிமீ, 50 மிமீ மற்றும் 85 மிமீ குவிய நீளம் கொண்டிருக்கும். 85 மிமீ லென்ஸ் சிறந்த நெருக்கமான உருவப்பட காட்சிகளுடன் வருவதாகவும், 50 மிமீ லென்ஸ் நிலையான பார்வைக் கோணத்தில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 35 மிமீ லென்ஸ் மூன்றில் மிக நெருக்கமான கோணத்தை வழங்கும்
என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், HD+ தெளிவுத்திறனுடன் 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 144Hz refresh rate கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக