திங்கள், 14 மார்ச், 2022

உலக சுகாதார அமைப்பு புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக எச்சரிக்கை

புதிய“டெல்டக்ரோன்” (Deltacron) என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது. இந்த வைரஸ் டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனை உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் வகை குறித்த ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மரியா வான் கெர்கோவ் உறுதிசெய்தார். இந்த திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வைரஸ் வகை குறித்து கவலைப்படுவதா என்பதை இப்போது உறுதி செய்யமுடியாது என்றும் உலக சுகாதார 
அமைப்பு கூறியது.
தற்போது சில பாதிப்புகள் பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி 
நிறுவனம் குறிப்பிட்டது.
அதேவேளை அதனுடன் தொடர்புடைய சுமார் 30 சம்பவங்களை அடையாளம் கண்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரப் பாதுகாப்பு 
நிறுவனம் கூறியது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.