திங்கள், 9 மே, 2022

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது

கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி நிலையினை அடுத்து அண்மைய நாட்களாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்து. எனினும் பிரதமரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து கொழும்பில் கலவரம் வெடித்திருந்தது. இதன் பின்னர், கொழும்பிலும், பின்னர் மேல் மாகாணத்திலும் ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே சற்று முன்னர் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.