இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தகவலின்படி 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் கச்சா எண்ணெய் தாங்கி ஏற்றிவந்த கப்பல்களை அகற்றுவதற்கு டொலர்கள் பற்றாக்குறையால் பெரும் காலதாமதத்தைச் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
டீசல் ஏற்றிச் வந்த கப்பலும், ஒக்டேன் 95 பெற்றோலை ஏற்றி வந்த இரண்டு கப்பல்களும் மார்ச் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இலங்கையை
வந்தடைந்தன.
எனினும், அவற்றைத் இறக்க முடியாத காரணத்தினால்01-05-2022. அன்று நிலவரப்படி மேலும் 422 மில்லியன் ரூபா தாமதக் கட்டணமாகச் செலுத்த
வேண்டியிருந்தது.
எனினும், டீசலை இறக்குவதற்கு தேவையான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு, இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
70,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிச் வந்த கப்பலுக்குச் செலுத்த வேண்டிய 70 மில்லியன் டொலர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அந்த கப்பலை வெளியேற்றும் பணி முடங்கியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக