புதன், 12 ஏப்ரல், 2023

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் சட்ட மன்றத்தில் இன்று அறிவிப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய போது, பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடல்தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் மூடப்படும். அவ்வகையில், இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சம்பளம் உயர்வு 
டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு 1,100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய் மற்றும் உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக சம்பளம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கானல் நீராகும் முழு மதுவிலக்கு
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு, பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த 500 டாஸ்மாக் 
கடைகள் மட்டும் தான் தமிழ்நாட்டில் உள்ளதா எனும் கேள்வி 
மக்கள் மத்தியில் கேட்கப்பட்டுள்ளது. ஏனென்றால் 
எங்க பார்த்தாலும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் குறையில்லை. இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. முழு 
மதுவிலக்கு தான் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், இன்று வரையிலும் அது மட்டும் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு முழு மதுவிலக்கு என்பது இன்னும் கானல்
 நீராகவே உள்ளது.


 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.