தோற்றம்.04-06-1946-மறைவு .25.09.2020
உடல்நலக்குறைவால்.25-09-20. அன்று காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்க இல்லத்தில்.26-09-20. இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும்
அஞ்சலி செலுத்தினர்.
நல்லடக்கம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கூறப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தலாம் என
தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக இடைவெளியை கடைபிடித்து, 100 பேருக்கு மிகாமல் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
"பாலு... நீ இல்லாம உலகம் சூன்யமாயிடுச்சு" - இளையராஜாவின்
உருக்கமான அஞ்சலி
எஸ்.பி.பி என்ற "பன்முக கலைஞன்" - "பாடும் நிலா" மறைந்தது
பல்வேறு தரப்பினரும் எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை
விடுத்திருந்தினர்.
இந்நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் வெளியிட்டார்.
தாமரைப்பாக்கம் இல்லத்தில் இறுதி மரியாதை
நடைபெற்று வருகிறது
மருத்துவமனை தெரிவித்தது என்ன?
கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை
நேற்று முன் தினம் தெரிவித்தது.
இந்நிலையில் .25-09-20. அன்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
எஸ்.பி.பியின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை
அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
கமல் ஹாசன், நடிகர் ரஜினி காந்த், மேற்கு
வங்க முதலமைச்சர் மம்தா பனேர்ஜி, மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் செளஹான், மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள்அணை வருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக