செவ்வாய், 29 செப்டம்பர், 2020

அச்சுவேலியில் படையினர் பிரதேசசபை தலைவர் மீது தாக்குதல் முயற்சி

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில்,28.09.2020.அன்று
வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு 
விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்ககூடாதென இலங்கை இராணுவம் அச்சுவேலி பகுதியில் வர்த்தகர்களை 
அச்சுறுத்தியுள்ளது.
ஒன்றிணைந்த அழைப்பில் இன்று வடக்கு கிழக்கில் முழு அடைப்பு இடம்பெற்று வருவதால் யாழ்ப்பாண நகரமும் முடங்கியுள்ளது. இந்நிலையில் அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு நேற்று மாலை நேரடியாக படை அதிகாரிகளாலும் புலனாய்வாளர்களாலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஸ் மீது தாக்குதல் முயற்சி 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அச்சுவேலி சந்தியில் உள்ள பேரூந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தியை சூழவும்  புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 
சம்பவம் தொடர்பில் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஸ் கருத்து தெரிவிக்கையில், 
நானும் உப தவிசாளரும் சென்று கடை உரிமையாளர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களை கடைகளை திறக்குமாறு காவல்துறையினரும்;, இராணுவ புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியதாக
 தெரிவித்தனர். பஜிரோ ரக வாகனத்தில் வந்த இராணுவ உயரதிகாரிகள் என்னுடைய 
வாகனத்துக்கு முன்பாகவும், பின்பாகவும்  பல தடவைகள் இடையூறு விளைவித்து வீடியோவும் எடுத்தார்கள். இந்த விடயம் தவிசாளர் என்கிற முறையில் என்னை அச்சுறுத்துகின்ற 
விடயமாகும். 
இப்போதும் கூட இங்கே ஒரு பதற்றமான சூழ்நிலை இருக்கின்றது. இராணுவத்தினர் நான் நேரில் சென்றதையடுத்து அச்சம் நீங்கி கடைகள் பூட்டப்பட்ட போது படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்துகின்றனர்.உங்களை கைது செய்வோம் என அச்சுவேலி காவல்துறையினர் மிரட்டினர்  என்றார்;. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.