¨வவுனியாவில் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவைக்கு எரிபொருள் இல்லாத நிலையில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல் வழங்கப்படவுள்ள நிலையில், சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் டீசல் நிரப்புவதற்காக 1990 அம்புலன்ஸ் வரிசையில் காத்து நிற்கின்றது.
வார நாட்களில் இலங்கை போக்குவரத்து சபையால் எரிபொருள் வழங்கப்பட்டாலும் வார இறுதி நாட்களில் எரிபொருள் இல்லாமல் குறித்த சேவைகள் வழங்கமுடியாத சூழ்நிலை
உருவாகியுள்ளது.
மேலும் கடந்த வாரங்களில் இ. போ. சவினாரால் மேற்கொள்ளப்பட்ட பணிபகிஸ்கரிப்பு காரணமாக எரிபொருள் பெறமுடியாத நிலையும் ஏற்பட்டதுடன், ஐ.ஒ.சி எரிபொருள் விற்பனை நிலையத்தில் அவசர சேவைக்கான எரிபொருட்கள் கையிருப்பில் வைத்துக்கொள்ளப்படாத நிலைமையும் உள்ளது.
மேலும் தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியால் பொதுமக்களின் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ள நிலையில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு திடீர் நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் இறப்புக்கள் பதிவாகக் கூடிய அதிக ச
ந்தர்ப்பம் உள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இயங்கும் மூன்று அம்புலன்ஸ் வண்டிகளில் இரண்டு வண்டிக்கு டீசல் இல்லாத அபாய நிலை
உருவாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக