வெள்ளி, 1 ஜூலை, 2022

எரிபொருள் பற்றாக்குறை யால் இலங்கை வரும் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலும், நாளொன்றுக்கு சராசரியாக 105 விமானங்கள் நாட்டிற்கு வந்து செல்வதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
இலங்கையில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை வந்தால் திரும்பி செல்வதற்கு ஏற்ற எரிபொருளுடன் வருமாறு விமான நிறுவகங்களுக்கு அறிவித்துள்ளோம்.இந்த நிலைமை சீராகும் வரை இந்த நடைமுறையை தொடர்ந்து அமுல்படுத்த நேரிடும். தினமும் குறைந்தது 10,000 விமானப் பயணிகள் நாட்டிற்கு வந்து
 செல்கின்றனர்.
எவ்வாறாயினும், தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக ஊழியர்களின் அழைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் இருப்பு 800 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளதாக அவர் 
மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.