இலங்கையில் புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குறித்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 அல்லது 3.5 மீற்றர் வரை எழும்புவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக