வெள்ளி, 23 டிசம்பர், 2022

கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் சிவப்பு அறிவித்தல்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களில் 7 பேருக்கு, ஏற்கனவே சர்வதேச காவல்துறையான, இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் காவல்துறை இந்த தகவலை 
வெளியிட்டுள்ளது.
இந்த ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையென்றாலும், கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை காவல்துறையினருக்கு இதுவரை இந்திய அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று காவல்துறையின் பேச்சாளர் 
தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் குணா என்ற சி குணசேகரன் மற்றும் பூக்குட்டி கண்ணா என்ற புஸ்பராஜா ஆகியோர் அடங்குவர். அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகத்தரான ஹாஜி சலீமுடன் நெருங்கிய தொடர்பில் பணியாற்றினர் என்பது 
தெரியவந்துள்ளது.
இவர்கள், இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க செயற்பட்டனர் என்று இந்திய புலனாய்வுப்பிரிவு குற்றம்
 சுமத்தியுள்ளது.
ஏற்கனவே இவர்கள் மீது ஜூலை 8ஆம் திகதியன்று வழக்கு ஒன்றும் பதிவுச்செய்யப்பட்டுள்ளது.
குணசேகரன் மற்றும் புஸ்பராஜா ஆகியோரைத் தவிர மொஹமட் அஸ்மின், அழகப்பெருமகே சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுக்க ரொஸான், வெல்ல சுரங்க என்றழைக்கப்படும் கமகே சுரங்க மற்றும் திலீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்னர்
இந்தநிலையில் அவர்கள் இந்தியாவில் தவறுகளை செய்திருந்தால், இந்திய நீதிமன்றத்திலேயே அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் 
செய்யப்படும்.
இலங்கைக்கு அவர்களை அழைத்து வரவேண்டுமானால், ராஜதந்திர ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எனவே, இது தொடர்பில் காவல்துறை மா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாக காவல்துறையின் பேச்சாளர்
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.