சனி, 3 டிசம்பர், 2022

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான சீனாவில் கருத்தை கூறிய விளையாட்டு வீரருக்கு 1 லட்சம் அபராதம்

னாவில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான கருத்தை கூறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு மக்கள் ஷாங்காய், பீஜிங் போன்ற நகரங்களில் தெருக்களில் இறங்கி தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்படுகிறது. இதனைத்தொடர்ந்து சீன அரசாங்கம் சில கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது. 
மேலும், போராட்டங்களையும் ஒடுக்க நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் அங்கு தேசிய கூடை பந்து போட்டி தொடங்கவிருக்கிறது.
அதில் கலந்து கொள்ளும் வீரர்கள், ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் கூடை பந்து வீரரான ஜெர்மி லின், கொரோனா விதிமுறைகள் என்று கூறி, அடிப்படை வசதிகள் அற்ற ஓட்டலில் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று இணையதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். 
இதனால் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 1,13,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.