இலங்கையில் நத்தார் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.2022இன் 3ஆம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில், கல்வி அமைச்சின் 2022.09.02ஆம் திகதிய மற்றும் 11/2022(I) இலக்க சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை திருத்தம் செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு தவணை இடம்பெறும் காலப்பகுதி,
இரண்டாம் தவணை 2022.09.13 தொடக்கம் 2022.12.01 வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.02 ஆம் திகதி தொடக்கம் 2022.12.04 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)
மூன்றாம் தவணை முதலாம் கட்டம் 2022.12.05ஆம் திகதி தொடக்கம் 2022.12.22 ஆம் திகதி வியாழக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.23ஆம் திகதி தொடக்கம் 2023.01.01 வரையில் நத்தார் விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் கட்டம் 2023.01.02ஆம் திகதி தொடக்கம் 2023.01.20ஆம் திகதி வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2023.01.21ஆம் திகதி தொடக்கம் 2023.02.19ஆம் திகதி வரையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை – 2022 இற்கான விடுமுறை வழங்கப்படும்.)
மூன்றாம் கட்டம் 2023.02.20ஆம் திகதி தொடக்கம் 2023.03.24ஆம் திகதி வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) முஸ்லிம் பாடசாலைகளுக்கு தவணை இடம்பெறும் காலப்பகுதி,
இரண்டாம் தவணை 2022.09.13 தொடக்கம் 2022.12.01 வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.02 ஆம் திகதி தொடக்கம் 2022.12.04ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)
மூன்றாம் தவணை முதலாம் கட்டம் 2022.12.05ஆம் திகதி தொடக்கம் 2022.12.22 ஆம் திகதி வியாழக்கிழமை வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2022.12.23 ஆம் திகதி தொடக்கம் 2023.01.01 வரையில் நத்தார் விடுமுறை வழங்கப்படும்.)
இரண்டாம் கட்டம் 2023.01.02ஆம் திகதி தொடக்கம் 2023.02.15 ஆம் திகதி வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக) (2023.02.16ஆம் திகதி தொடக்கம் 2023.02.28ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)
மூன்றாம் கட்டம் 2023.03.01ஆம் திகதி தொடக்கம் 2023.03.21ஆம் திகதி வரையில் (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக