நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பத்மநாதன் மயூரன் வெற்றி
பெற்றுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) மதியம்
இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசுதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன்மொழியப்பட்டனர். தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதன்படி மதுசுதனன் 08 வாக்குகளையும் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர்.
மதுசுதனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினர் என 8 உறுப்பினர்கள்
வாக்களித்தனர்.
மயூரனுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்கள், சுயேட்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தல ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள்
வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேர் சபை அமர்பில் கலந்து
கொள்ளவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக