திங்கள், 7 டிசம்பர், 2020

பொலிஸாரின் கைதுக்கு தடை கோரி வலி கிழக்கு தவிசாளர் விண்ணப்பம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தன்னை பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் முன் பிணை விண்ணப்பத்தை நாளை மறுதினம் (09-12-20) பரிசீலனைக்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்றில் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவித்தல் 
அனுப்ப உத்தரவிட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்செழு அம்மன் கோவில் வீதியை சீரமைக்கும் பணியை ஆரம்பித்து நடப்பட்ட திட்ட பெயர்ப்பலகை நாட்டப்பட்டது. அது வலி கிழக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது நாட்டப்பட்டது என்று தவிசாளர் தியாராஜா நிரோஷ், அதனை அகற்றுவதற்குப் பணித்திருந்தார். அந்தப் பெயர்ப் பலகை கடந்த 
வாரம் அகற்றப்பட்டது.
இந்நிலையிலேயே அரச சொத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை இன்று (07) அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்ய சபையின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தனர். காலை முதல் மாலை வரை அவர் சபைக்கு சமூகமளிக்காததால் பொலிஸார் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறான நிலையில் வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், தியாகராஜா நிரோஷை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்யவதைத் தடுக்கும் விண்ணப்பம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது. தவிசாளர் கைது
 செய்யப்படுவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று குறிப்பிட்டு சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுபாஸ்கரன் உள்ளிட்டோர் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.
அதனை ஆராய்ந்த மன்று விண்ணப்பத்தை. 
நாளை மறுதினம் பரிசீலனைக்கு எடுக்க திகதியிட்ட மல்லாகம் நீதிமன்றம், அன்றைய தினம் அச்சுவேலி பொலிஸாரை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் 
அனுப்ப உத்தரவிட்டது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.