வெள்ளி, 11 டிசம்பர், 2020

வாழைச்சேனையில் பாதீட்டு அமர்வு களேபரத்தில் பெண் உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர்

வாழைச்சேனை பிரதேச சபை பாதீட்டு அமர்வை நடத்துவதற்கு எதிராக சபை வாயிலை அடைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் போராடிய போது ஆளும் கட்சியுடன் ஏற்பட்ட குழப்பத்தால் வாழைச்சேனை பிரதேச சபையின் ஐதேக உறுப்பினர்களான திருமதி.பி.லெட்சுமி, எம்.எல்.நபீரா ஆகியோர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தாெடர்பில்,
எம்.எல்.நபீரா கருத்து தெரிவிக்கையில்,
“எங்களது இரண்டு உறுப்பினர்கள் வருகை தராமையினால் சபையை நடத்த கூடாது என்று நான்கு பெண் உறுப்பினர்களும் போராட்டம் நடத்திய போது சபை உறுப்பினர் மணி என்பவர் காலினால் எனது முதுகில் தாக்கி எனது நெஞ்சில் அடித்து எனது கையையும் உடைத்து
 கீழே தள்ளினார்.
அத்தோடு சபை உறுப்பினர்களான கபூர், சுதர்சன் இருவரும் எனது கழுத்தினை பிடித்து இறுக்கினார். அத்தோடு எனது ஆடையை பிடித்து இழுத்தனர். அத்தோடு சபைக்கு சம்பந்தமில்லாத ஒப்பந்தகாரர் பஸ்மி என்பவர் எனக்கு தகாத வார்த்தையில் பேசினார். நான் தாக்கப்பட்ட நிலையில் எனது சக உறுப்பினர்கள் என்னை தூக்கி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.” – என்றார்.
திருமதி.ப.லெட்சுமி கருத்து
 தெரிவிக்கையில்,
“எமது இரண்டு சபை உறுப்பினர்களை வருகை தந்ததும் கூட்டத்தினை நடாத்துமாறு பிள்ளையானின் காலில் விழுந்து அழுது கேட்டேன். ஆனால் அவரோடு வந்த அடியாட்கள் என்னை கொலை செய்வதாக மிரட்டினார்கள். பிள்ளையானின் ஆதரவாளர் சுமன் என்பவர் என்னை வெட்டுவதாக தெரிவித்தார்.
என்னை தாக்குமாறு தவிசாளர், சபை உறுப்பினர்களான இம்தியாஸ் மற்றும் நடராசாவிடம் தெரிவித்ததை தொடர்ந்து இவர்கள் என்னை தாக்கினார்கள். எனது மாலையால் எனது கழுத்தினை 
நசித்தார்கள்” என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.