வெள்ளி, 17 ஜூலை, 2020

பத்து வயது சிறுமியின் புத்தளத்தில்நடந்த மரணத்தில் சந்தேகம்

புத்தளத்தில் 10 வயது சிறுமி ஒருவரின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக புத்தளம் வைத்தியசாலை பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி அதிக இரத்தப்போக்கு காரணமாக மரணமடைந்துள்ளார் என புத்தளம் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளனர்.
16-07-20.அன்றய  தினம் குறித்த சிறுமியை 
அவரது தாயார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். தனது மகளை நாகம் சீண்டியதாக வைத்தியர்களிடம் குறித்த தாய் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமிக்கு அதிதீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக புத்தளம் வைத்தியசாலை பொலிஸார் புத்தளம் பொலிஸாரின் பிரதான அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் சடலம் 
இன்று 17-07-20. உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி 
வைக்கப்படவுள்ளது.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.