இலங்கையில் தமிழ் மன்னன் இராவணன் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.இராமாயணத்தின் வில்லனான இராவணன், ராமரின் காலத்தில் இலங்கையின் ஆட்சியாளராக
இருந்துள்ளார்.அவர் இந்தியாவில் இந்துக்களுக்கு ஒரு அரக்கனாக காணப்பட்டாலும், அவர் நிச்சயமாக ஒரு
புதிரானவர் எனவும், ஒரு சிறந்த மன்னன் மற்றும் பல இலங்கையர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில், மன்னன் இராவணனைப் பற்றி ஏதாவது ஆவணங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம்
கோரியிருந்தது.
சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சினால் வெளியிட்ட செய்தித்தாள் விளம்பரத்தில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.புராண மன்னர், இழந்த பாரம்பரியம் மற்றும் நாட்டின் விமான
ஆதிக்கம் குறித்து ஆழமான ஆராய்ச்சியை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு உதவுவதற்காக, இராவண மன்னருடன் தொடர்புடைய
ஏதேனும் ஆவணங்கள் அல்லது புத்தகங்களை இருப்பின் பகிர்ந்து கொள்ளுமாறு
மக்களிடம் கோரப்பட்டது.5000 வருடங்களுக்கு முன்னர் உலகில் முதன் முறையான விமானத்தை
பயன்படுத்தியவர் இராணவனன் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, பண்டைய காலங்களில் விமானங்களில் பறக்க
இராவணனன் பயன்படுத்திய முறைகளைப் அறிந்துக் கொள்வதற்குகான முயற்சியை ஆரம்பித்துள்ளது.இராவணன் முன்னோடியானவர் என்பதையும், விமானத்தைப் பயன்படுத்தி முதன்முதலில்
பறந்தவர் என்பதையும் நிரூபிக்க மறுக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதான இந்திய ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட இலங்கை அதிகாரி
குறிப்பிட்டுள்ளார்.
இராவண மன்னன் ஒரு மேதை. அவர் தான் முதலில் விமானத்தில் பறந்தார். அவர் ஒரு விமானியாக இருந்தார். இது புராணம் அல்ல. இது ஒரு உண்மை. இது குறித்து விரிவான ஆராய்ச்சி முன்னெடுக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை நாங்கள் நிரூபிப்போம், ”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக