நாடாளுமன்றத்தில் பல கணினி மற்றும் அலைபேசி அடிப்படையிலான விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதனால் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி கணினி விளையாட்டின் சிலவற்றின் காரணமாக சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்வதாகவும்
அவர் தெரிவித்தார்.
இதனால் விளையாட்டுக்களை தடை செய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக