சனி, 16 மே, 2026

இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்

இலங்கையில் இந்த நடப்பு ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
.எனினும், ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத்தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை
இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். அதுகுறித்து அச்சப்பட வேண்டிய தேவையில்லை. அதனை நடத்தி முடிக்கும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கமும் உள்ளது” என அமைச்சர் 
தெரிவித்துள்ளார்.  
இதனிடையே 2013ம் ஆண்டில் நடைபெற்ற வட மாகாண சபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தது.
அதன் மூலம் முதலாவது வடமாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் பிளவுண்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடாத்த இலங்கை அரசு தற்போது அறிவிப்புக்களை விடுத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.