செவ்வாய், 19 மே, 2026

நாட்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகளுக்கு நிதியுதவி

நாட்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்பட்டால், அக்குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க 
தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு  மாதம் 10,000 உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) அதிகாரிகள், பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கலந்தாய்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். 
பாராளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தொடர்புடைய அறிக்கையை இன்று வெளியிட்டது. 
இதன்படி வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாத வருமானம் 400 அமெரிக்க டாலரைத் தாண்டும் குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஆரம்ப ஒதுக்கீடாக ரூ 10,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
 இத்திட்டத்திற்காக 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. . என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.