நாட்டில் ஹொரண மற்றும் கோனப்பொல பகுதிகளைச் சேர்ந்த 26–29 வயதுடைய நான்கு பெண்கள், அங்குருவாதொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, ஹொரண பெல்லபிட்டிய பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு குளிக்கச் சென்ற இவர்கள், அங்கு மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் போதை நிலையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் இவர்களை நிறுத்தி பரிசோதனை செய்தபோது, அவர்கள் மது போதையில் இருந்ததாக கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று
வருகின்றன.
சம்பவம் தொடர்பான தகவல்கள் பொலிஸ் அறிக்கைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றன; விசாரணையின் பின்னரே முழு உண்மை உறுதியாகும்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக