திங்கள், 13 பிப்ரவரி, 2023

மடுக்கரை, முள்ளிமோட்டை கிராமகளில் வசித்துவரும் மக்களின் அவலநிலை

 மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மடுக்கரை, முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்துக்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததால் பிரதேசவாசிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் தமது கிராமத்துக்கு நேரடியாக வருகை தந்து, பார்வையிட்டு, உள்ளக வீதி மற்றும் பாலம் போன்றவற்றை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்தான பயணம்
மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் 2018ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட 90 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் 18 குடும்பங்கள் ஆற்றைக் கடந்து குடியேற்றப்பட்டுள்ளன.
அவர்களின் வீடுகளுக்கு அருகாமையிலேயே அருவி ஆற்றின் கிளை ஆறு ஓடிக்கொண்டிருப்பதால் தற்காலிக பாலம் கூட அமைத்துக் கொடுக்கப்படாமல், அங்கே வசிப்பவர்கள் ஆற்றில் இறங்கியே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
மழைக் காலங்களில் ஆற்றில் நீர் நிறந்து ஓடுவதால் அன்றாட கடமைகளை செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் திண்டாடி
 வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினையால் அவர்கள் தமது உறவினர்களின் வீடுகளிலேயே வசித்து வருவதாகவும் அவர்கள் கவலை
 வெளியிட்டுள்ளனர்.   


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.