ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

மருதானை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை

கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்திற்கு எதிரே சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்த மௌனப் போராட்டக்காரர்கள் மீது, கடந்த வெள்ளிக்கிழமையன்று நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினத்திலும் சனிக்கிழமையும் (04) ஆணைக்குழுவின் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று,இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில நாளை திங்கட்கிழமை,சம்பவங்களின் பூர்வாங்க அறிக்கை தமக்கு சமர்ப்பிக்
பெரும் பொதுச் செலவில் நடத்தப்பட்ட 75வது சுதந்திர தின விழாவுக்கு எதிராக மௌனப் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்களால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் 
நடத்தப்பட்டது.
இந்த மௌனப் போராட்டத்தின் போது மற்றும் ஒரு குழுவினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்;டு பிரச்சினையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர்; தலையிட்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி அப்புறப்படுத்தியதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 03 பேர் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு; பிணையில் அனுமதிக்கப்பட
 உள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.