வெள்ளி, 27 ஜனவரி, 2023

அமெரிக்காவின் 6 முக்கிய அமைப்புகள் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கடிதம்

 

இலங்கையின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அமெரிக்காவின் 6 முக்கிய அமைப்புகள் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
அதில் ஒரு சுதந்திர வாக்கெடுப்பு கோரியும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுதப் போரின் இறுதிக்கட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,679 ஆக இருக்கலாம் என்றும் அந்த அமைப்புகள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளன.
சுதந்திரத்திற்குப் பின்னர், அடுத்தடுத்து சிங்கள பௌத்த தேசியவாத அரசாங்கங்களின் கீழ் தொடர்ச்சியான ஒடுக்குமுறை மூலம் இலங்கை அரசால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு
 வருகின்றன.
இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு, நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்ற விடயங்களில் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, பரந்த உலகிற்கும் கவலை தருவதாக அந்த அறிக்கை 
மேலும் கூறுகிறது.
எனவே ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துங்கள்.
ஈழத் தமிழர்களின் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் தீர்மானிக்க சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையின் பரிந்துரையைத் தொடர, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டைப் பயன்படுத்த அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துங்கள் என்று அமெரிக்காவின் 6 தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை 
விடுத்துள்ளன.
அவர்கள் அரசியலமைப்புகள் மற்றும் பல பெரிய தலைப்புகளைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் முட்டை பிரச்சினையை தீர்க்க முடியாதுள்ளார்கள்.
எவ்வாறாயினும், பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இந்த முட்டைப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், மரியாதை வேட்டுக்களின்; மத்தியில் கோழிகள் மற்றும் சேவல்களின் சத்தம் மக்களுக்கு கேட்கும் என்று 
அசேல சம்பத் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.