செவ்வாய், 10 ஜனவரி, 2023

பூப்புனித நீராட்டுவிழா நடத்த கனடாவிலிருந்து யாழ் வந்த குடும்பம்.இறுதியில் தாய் மகளுக்கு நடந்த கதி

கனடாவில் இருந்து தனது மகளின் சாமத்தியவீட்டை சிறப்பாகச் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்த குடும்பப் பெண் தனது சடங்கான மகளுடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கணவருடன் ஏற்பட்ட சண்டையின் பின்னரே குறித்த பெண் தனது மகளுடன் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகின்றது.இந்நிலையில் மனைவியையும் மகளையும் காணவில்லை என பொலிசாரிடம் 
முறையிடப்பட்டுள்ளது.
கடந்த வியாழன் இரவு தனது மனைவி தன்னுடன் சண்டையிட்டு தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் அவரது தொடர்பு கிடைக்கவில்லை எனவும் கணவர் பொலிசாரிடம் 
முறையிட்டுள்ளார்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மனைவி தான் கணவருடன் முரண்பட்டு தனது உறவுக்காரர் வீட்டில் தங்கியுள்ளதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் மனைவி பொலிசாருக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் தனது கணவர் தன்னை மது போதையில் கணவரின் உறவுகளுக்கு முன் தாக்கியதாகவும், கனடாவுக்கு மீளச் செல்வதற்கான விமான ரிக்கட் திகதியில் தாம் கட்டுநாயக்காவுக்கு செல்வோம் என குறித்த குடும்ப பெண் தெரிவித்துள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன் யாழில் உள்ள பிரபல விடுதியில் பெருமளவு பணச் செலவில் குறித்த தம்பதியினர் தமது மகளுக்கு சாமத்திய சடங்கு செய்துள்ளனர்.அத்துடன் அந்த சடங்கில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான நினைவுப் பரிசுகளும் கொடுத்துள்ளார்கள்.
தொடர்ந்து அன்று இரவு கணவரின் உறவுக்காரரின் வீட்டில் வெளிநாட்டுச் சாராயத்துடன் கூடிய விருந்தும் மற்றும் இசை நிகழ்வும் நடந்த அடுத்தநாளே கணவர் தனது மனைவியை தாக்கியதாக தெரியவருகின்றது.இதன் பின்னரே மனைவி மற்றும் மகள் கணவரை விட்டு பிரிந்து சென்றதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.