வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சிறுதானியப் பயிர்ச்செய்கையை கிளிநொச்சியில் ஊக்குவிக்க வேண்டிய கட்டாய நிலை

 


தற்காலத்தில், சிறுதானியங்களுக்கான பயிர்ச்செய்கையானது விவசாயிகளிடையே அருகிவரும் நிலையில் காணப்படுவதால், சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயநிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளதாக, மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி – செல்வாநகர் கிராமத்தில், நேற்று  (19)  நடைபெற்ற குரக்கன் செய்கை அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொரேனா வைரஸ் தாக்கா்தின் பின்னர்  எழக்கூடிய உணவுப் பாதுகாப்பை எதிர்கொள்ளும் முகமாக,  கிளிநொச்சி மாவட்டத்தில், விவசாயிகளிடையே 
சிறுதானியப் பயிர்ச்செய்கையானது ஊக்குவிக்கப்பட்டு வருகின்றதென்றார்.
 குறைந்தளவான நீர், பசளை, நோய்த்தாக்கத்துடனும் குறைந்தளவு கூலியாள் செலவுடனும் வெற்றிகரமாகப் பயிர்செய்யக்கூடிய சிறுதானியப் பயிர்களில் ஒன்றான குரக்கன் செய்கையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த 
அவர், கிளிநொச்சி மாவட்டத்தின் மீண்டுவரும் செலவீனத்தில் 30 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு “ஓளசதா” எனும் புதிய குரக்கன் இனம் இவ்வாண்டு சிறுபோகத்தில் வழங்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதேபோன்று, “சௌபாக்கியா” எனும்  திட்டத்தினூடாகவும் 45 பயனாளிகளுக்கு குரக்கன் விதைகள் வழங்கிவைக்கப்பட்டு, தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக, அற்புதச்சந்திரன் 
மேலும் கூறினார்.
அத்துடன், விதை மானியத்திட்டத்தின் ஊடாகவும் சுமார் 21 ஏக்கர் விஸ்தீரணத்தில் செய்கை பண்ணப்பட்ட குரக்கனிலிருந்து குரக்கன் மாவானது இறக்குமதி செய்யப்படுமெனவும், அவர் தெரிவித்தார்,
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.