ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

இலங்கையின் புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்கப் போகும் அரசியல் வாதிகள் யார்.

 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை அடுத்து வரும் சில தினங்களில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது.புதிய அமைச்சரவையில் 26 என்ற மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சர்களே இருப்பார்கள் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த 26 அமைச்சர்களுக்கும் வழங்கப்படவுள்ள பொறுப்புகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கண்டியில் பதவிப் பிரமாணம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அமைச்சரவையின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சு பதவிகளை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.சமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, டலஸ் அலஹபெரும, விமல் வீரவன்ச, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, உதய கம்மன்பில, ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்த, மஹிந்தானந்த அழுத்கமகே ஆகியோரே புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளதாக தெரிய வருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.