திங்கள், 31 ஆகஸ்ட், 2020

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில்.31-08-20. இன்று

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று (30) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன், மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில்.21-08-2020. இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேசமே மௌனம் காப்பது ஏன், இலங்கை
 அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் வெளிவரும், காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, 
சர்வதேசமே புதிய அரசாங்கத்திடம் நீதியை பெற்றுத்தாருங்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை 
ஏந்தியவாறு அமைதியான முறையில் 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு இடம் கோரி கையெழுத்துக்களும்
 பெற்றுக்கொள்ளப்பட்டன.
அதேநேரம் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பினால் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபலனிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் 
சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் 
தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.