வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தனிநாட்டை உருவாக்கி தனிகெத்துக் காட்டும் சுவாமி நித்தியானந்தா

 
எல்லோரும் கைலாச நாடு என விளையாட்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், உண்மையிலேயே அப்படி ஒரு நாட்டை உருவாக்கிக் கெத்துக் காட்டி கொண்டிருக்கிறார் நித்யானந்தா.ஒரு கட்டத்தில் மிகப்பெரிய பரபரப்பை
 ஏற்படுத்திக் கொண்டிருந்த நித்தியானந்தா, திடுதிப்பென ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார். இடையில் அவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகாமல் சமூக வலைதளங்கள் அரண்டு போய்விட்டன.
தற்போது அதிரடியாக மீண்டும் வந்துள்ளார் நித்யானந்தா. அதிகாரப்பூர்வமாக தனது கைலாசா நாட்டை உருவாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், கைலாச நாட்டுக்கு எப்படி வர வேண்டும், அதற்கு 
என்ன செய்ய வேண்டும், கைலாச நாடு 
எப்படி இருக்கும் என்பதையெல்லாம் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா கூறியதாவது, நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் அதை நல்ல காரியங்களுக்கு செலவிட தனியாக வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.வாடிகன் வங்கியை 
மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியை தொடங்கியுள்ளதாகவும், அதற்கு தேவையான 300 பக்க அறிக்கையையும் உருவாக்கி
 விட்டதாகவும் தெரிவித்துள்ளார். கைலாச நாட்டிற்கு தனியாக பணம் அச்சிடப்பட்டு விட்டது எனவும் விரைவில் அதை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார், மேலும் உள்நாட்டு செலவுக்கு ஒரு பணத்தையும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு தனி பணத்தையும் உருவாக்கியுள்ளாராம்.மேலும், கைலாசாவின் ரிசர்வ் வங்கி அரசின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் அடிபணிந்து தான் உருவாக்கியுள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்யப்படவில்லை எனவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான அடுத்தகட்ட அறிவிப்புகளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப் போவதாகவும்
 தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிறிது காலமாக அவர் பாட்டுக்கு தான் உண்டு , தன் வேலையுண்டு என லைவில் சொற்பொழிவு
 மட்டும் நடத்தி வந்தார். தற்போது அவர் ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாடு பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் நல்ல காரியங்களுக்காக செலவிட வங்கி தொடங்கியுள்ளேன். வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளது. 300 பக்க பொருளாதார கொள்கையும் தயாராகஉள்ளது.கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டுவிட்டது. 
விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும் வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது. கைலாசாவின் ரிசர்வ் வங்கி, சட்டத்தின் படியே தொடங்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது எனவும் நித்தியானந்தா மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.