சனி, 27 ஜூன், 2026

ஓடும் பேருந்திற்குள் யாழில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு இராணுவ கப்டன் கைது

யாழில்  ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது
 செய்யப்பட்டுள்ளார்.
யாழ்  நகர் பகுதியில் இருந்து  பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்
. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி , யாழ் பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து , விரைந்து செயற்பட்ட பொலிஸார் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து , 
குறித்த நபரை கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , குறித்த நபர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது. 
கைது செய்யப்பட்ட நபரை யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.