வெள்ளி, 26 ஜூன், 2026

பொது இடங்களில் பாரிஸில் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிப்பு

கடுமையான வெப்ப காலநிலை காரணமாக பாரிஸில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், தற்போது மது விற்பனை செய்வதற்கும் பிரெஞ்சு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
வெப்ப அலையின் போது மருத்துவமனைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது இன்று நண்பகல் முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை 
பல நாட்களாக புழுக்கத்தில் ஆழ்த்திய வெப்ப அலை நிலைமைகள் படிபடியாக குறைந்து கிழக்கு நோக்கி நகரவிருக்கின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.