செவ்வாய், 16 ஜூன், 2026

சுவிஸ் ஜெனீவாவில் சுவிஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகள் இடையே பேச்சுவார்த்தை

சுவிஸ் ஜனாதிபதிகை பார்மெலின், ஜெனீவா விமான நிலையத்தில் தனது உக்ரைன் நாட்டு சகா வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை இருதரப்பு சந்திப்பிற்காக வரவேற்றுள்ளார். 
கீவ் மற்றும் மாஸ்கோ இடையேயான மோதலில் சுவிட்சர்லாந்தின் நல்லெண்ண முயற்சிகள், உக்ரைனின் புனரமைப்பு மற்றும் அந்நாட்டுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை சந்திப்பின் போது 
பேசப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கியை வரவேற்ற சுவிஸ் ஜனாதிபதி, "ஜனவரியில் நடந்த டாவோஸ் மாநாட்டிற்குப் பிறகு உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியுடன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ரௌஸ்டெம் உமரோவ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.