வெள்ளி, 5 ஜூன், 2026

நாடளாவிய ரீதியில் முதியோர் இல்லங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள்

நாடளாவிய ரீதியில் இயங்கும் முதியோர் இல்லங்களைப் பதிவு செய்வதையும் ஒழுங்குபடுத்துவதையும் வலுப்படுத்துவதற்காகப் புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
 தெரிவித்துள்ளது.
இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிய விதிமுறைகளின் கீழ் அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் பதிவு கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் முறையான கண்காணிப்பும் பராமரிப்புத் தரமும் உறுதி செய்யப்படும். நாட்டில் இதுவரை 455 முதியோர் இல்லங்கள் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 10,000க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு
 வருகின்றனர். 
எனினும், பல நிறுவனங்கள் முறையான பதிவின்றி இயங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஹொரணை - அங்குருவாத்தோட்டையில் 12 முதியவர்கள் உயிரிழக்கக் காரணமான தீ விபத்து ஏற்பட்ட முதியோர் இல்லம், உத்தியோகபூர்வ பதிவின்றி இயங்கி வந்தமை 
உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இல்லத்தின் பணிப்பாளர் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த தீ விபத்தின் போது பாதுகாப்பாக மீட்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட 08 முதியவர்கள், கதிர்காமத்தில் உள்ள அரச முதியோர் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.