நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஜூன் 24 முதல் 26 வரை மூன்று நாள் நாடு தழுவிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று 22-06-2026.)நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசாங்க நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளை உள்ளடக்கிய குறுகிய கால டெங்கு கட்டுப்பாட்டிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விவரிக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட முடிவு செய்யப்பட்டது.
மேலும், ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில் 600 கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு
குறிப்பிட்டது.
மேலும், முப்படைகளின் தலைமையில் ஒரு கண்காணிப்புப் பிரிவை நிறுவுவதற்கும், சட்ட அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், உள்ளூர் மட்டத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள
சமூக வலுவூட்டல் மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக