வாகனங்களில் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாடு மற்றும் ஏர்பேக் வெடிக்கும் அபாயம் காரணமாக, கனடாவில் 17,000க்கும் மேற்பட்ட வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் அவசரமாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
டொயோட்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய இரு வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த தனித்தனி அறிவிப்பை
வெளியிட்டுள்ளன.
இயந்திரங்கள் முறையாகத் தயாரிக்கப்படாததால், வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென இயந்திரம் பழுதடைந்து நின்றுவிடும் அபாயம் உள்ளதாகக் கூறி டொயோட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 17,000 வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது.
3.4L ட்வின்-டர்போ (Twin-turbo) என்ஜின் கொண்ட 2024 லெக்ஸஸ் ஜிஎக்ஸ் 550 (Lexus GX 550), 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு மாடல் லெக்ஸஸ் எல்எக்ஸ் 600 (Lexus LX 600), மற்றும் 2023, 2024 ஆம் ஆண்டின் டொயோட்டா டன்ட்ரா (Toyota Tundra) வாகனங்கள் இதில் அடங்கும். என்பதும் குறிப்பிடத்தக்கது
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக