யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக இன்று சனிக்கிழமை காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு
வருகின்றனர்.
இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையில் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது
இந்த நிலையில் குறித்த போராட்டம் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல்வாதிகள் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் வகையில் வாகனப் பதிவு, ட்ரோன் மூலம் கண்காணிப்பு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் புகைப்படமெடுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
இந்த அச்சுறுத்தல்கள் இல்லாதிருந்தால் ஏராளமான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் காணி விடுவிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர் கூறியுள்ளார்.
களவெடுத்த பொருளுக்கு பாதுகாப்பு வழங்குவது போன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக