வியாழன், 1 ஜனவரி, 2026

நல்லூரில் இன்று புத்தாண்டை முன்னிட்டு விசேட வழிபாடுகள்

இன்று வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலில் புத்தாண்டை வரவேற்று தீபங்கள் ஏற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்படடு வரவேற்கப்பட்டது.
 இதேவேளை மலர்ந்திருக்கும் புதிய ஆண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் 
முன்னெடுக்கப்பட்டன.
 ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சுகுமார் குருக்களின் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
 இதன்போது நாட்டு மக்களுக்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் புதுவருட ஆசிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
 இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டதை காணமுடிந்தது..
என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.