குருந்தூர் மலை ஒரு முக்கியமான தொல்பொருள் தளம் எனவும், விகாரைக்கு சொந்தமான அரச காணிகளை வேறு தரப்பினருக்கு வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
1985ஆம் ஆண்டு வனம் மற்றும் வனவிலங்கு வலயங்களாக இருந்த காணிகளை அவ்வாறே பாதுகாப்பதே வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகளுக்கு உத்தேச தீர்வு என ஜனாதிபதியின் செயலாளர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அது தொடர்பில் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குருந்தி விகாரைக்கு சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு அமைய
தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தின் ஊடாக குருந்தி விகாரைக்கு சொந்தமில்லாத காணியை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கோவிலை சுற்றிலும் பல இடங்களில் பல்வேறு பௌத்த விஹாரைகளின்
இடிபாடுகள் சிதறிக் கிடப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த நிலங்களை பகிர்ந்தளிப்பது பொருத்தமற்றது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் குருந்தி கோவில் மற்றும் திரிய பிரதேசத்தின் இடிபாடுகள் தொடர்பிலும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருந்தி விகாரையைச் சுற்றியுள்ள சில வயல் காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்கள் மற்றும் காணிகளை இனங்கண்டு மாவட்ட செயலாளரின் பாதுகாப்பில் வைப்பதே அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும்
தெரிவித்துள்ளது.,என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக