வியாழன், 29 ஜூன், 2023

ஜப்பானில் சிவப்பு நிறமாக திடீரென மாறிய ஆற்று நீர் அதிர்ச்சியடைந்த் பொதுமக்கள்

ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா ஆற்று நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆற்று நீரானது திடீரென செந்நிறமாக மாறி காட்சியளித்தது.
மேலும், வழக்கமாக நீல நிறத்தில் தெளிவாக தென்படும் இந்த பகுதி நீரானது செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 
அருகில் உள்ள பீர் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே, ஆற்று நீர் செந்நிறமாக மாறியது தெரியவந்துள்ளது.
பீர் தயாரிப்பு நிறுவனமான ஓரியன் ப்ரூவரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீரின் நிறம் மாறியதாக தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.