யாழ் புத்தூர் வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் 05-06-2023-அன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.
1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05ஆம் திகதி புத்தூர் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டனர்.
அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு பிள்ளையார் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை செய்யப்பட்டு அஞ்சலி
செலுத்தப்பட்டது.
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் மனைவி மற்றும் உறவினர்கள் ஆகியோரால் பொதுச்சுடர் மற்றும் நினைவுச் சுடர் ஏற்றி கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக