உணவுப் பொருட்களை ஆரோக்கியமான வழியில் சமைத்து சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.
உணவுகளை பல வழியில் சமைத்து சாப்பிடலாம்.
ஆனால் உணவுகளை எண்ணெயில் பொரித்து உண்பதை விட ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.
தற்போது உணவுகளை குக்கரில் சமைத்து சாப்பிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
ஏனெனில் குக்கரில் சமைக்கும் போது குறுகிய நேரத்தில் உணவுகளை சமைத்துவிடலாம்.
ஆனால் அனைத்து உணவுகளையுமே குக்கரில் சமைத்து சாப்பிடக்கூடாது. சில சமயங்களில் குக்கரில் சமைக்கும் உணவுகளும் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
அதுவும் சில உணவுகளை குக்கரில் சமைக்கும் போது அதன் விளைவாக உணவின் சுவை பாழாவதோடு உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.அரிசி
தற்போதைய காலத்தில் சாதத்தை குக்கரில் தான் சமைத்து
சாப்பிடுகிறார்கள்.
ஆனால் அது முற்றிலும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் அரிசியில் ஸ்டார்ச் உள்ளது.
இது தீங்கு விளைவிக்கும் அக்ரிலாமைடு என்ற கெமிக்கலை வெளியிடும்.
இந்த கெமிக்கல் உடலில் சில மோசமான பிரச்சனைகளை வரத் தூண்டும்.
எனவே குக்கர் சாதத்தை சாப்பிடாமல் வடித்த சாதத்தை சாப்பிடுங்கள்.
பால் பொருட்கள்
பால் பொருட்களை எப்போதும் குக்கரில் சமைத்து சாப்பிடுவதைத்
தவிர்க்க வேண்டும்.
பொதுவாக குக்கரில் வேக நீண்ட நேரம் எடுக்கும் உணவுகளையே
சமைக்க வேண்டும்.
ஆனால் பால் மற்றும் பிற பால் பொருட்கள் குறைவான நேரத்திலேயே சூடாகிவிடும்.
எனவே பால் பொருட்களை குக்கரில் சமைக்கக்கூடாது.உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை பெரும்பாலும் குக்கரில் தான்
வேக வைப்போம்.
ஆனால் அரிசியைப் போன்றே உருளைக்கிழங்கிலும் ஸ்டார்ச்
அதிகமாக உள்ளன.
எனவே சாதத்தைப் போன்றே உருளைக்கிழங்கையும் குக்கரில் வேக வைக்கக்கூடாது.
நிச்சயம் பாத்திரத்தில் உருளைக்கிழங்கை வேக வைத்தால் நீண்ட நேரம் எடுக்கும்.முட்டை
சிலர் முட்டை விரைவில் வேக வேண்டும் என்பதற்காக குக்கரில் முட்டைகளை வேக வைப்பார்கள்.
ஆனால் முட்டைகளை குக்கரில் வேக வைக்கும் போது விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
பொதுவாக முட்டைகளை எப்போதும் உயர் தீயில் தான்
வேக வைக்க வேண்டும்.
ஆனால் குக்கரில் முட்டைகளை சமைக்கும் போது உயர் தீயில் வைத்தால் அது விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். பாஸ்தா
குக்கரில் சமைக்கக்கூடாத மற்றொரு உணவுப்
பொருள் பாஸ்தா.
பெரும்பாலானோர் பாஸ்தாவை வாணலியில் சமைத்தாலும் சிலர் பாஸ்தாவை குக்கரிலும் சமைக்கிறார்கள்.
பாஸ்தாவிலும் ஸ்டார்ச் அதிகமாக இருப்பதால், குக்கரில் சமைத்தால் அது தீங்கு விளைவிக்கும் கெமிக்கலை வெளியிட்டு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
காய்கறிகள் மற்றும் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இப்படிப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்போதுமே குக்கரில் சமைக்கக்கூடாது.
அப்படி சமைத்தால், அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் முழுமையாக அழிந்துவிடும்.மீன்
அசைவ உணவுகளை பெரும்பாலும் குக்கரில் சமைப்போம்.
ஆனால் மீன் மிகவும் குறுகிய நேரத்தில் விரைவில்
வேகக்கூடியது.
மீன் சற்று அதிகமாக வெந்துவிட்டாலும், அதன் சுவை பாழாகிவிடும்.
எனவே மீனையும் குக்கரில் சமைக்கக்கூடாது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக