செவ்வாய், 13 ஜூன், 2023

இலங்கையில் மருந்துப்பொருட்களின் விலை குறையும் சாத்தியமாம்

இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்களில் மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குமான சாத்தியம் உள்ளது, சவாலான தருணங்களை சரியான முறையில் முகாமை செய்ததால் சுகாதாரத்துறை இப்போது ஸ்திரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தும்பன பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜூன் 15ஆம் திகதி முதல் மருந்துப் பொருட்களின் விலையை 16 வீதத்தால் குறைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையை மீளாய்வு செய்து விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 406 வைத்தியர்கள் பயிற்சிக்காக அனுப்பப்படவுள்ளதாகவும் அடுத்த மாதத்திற்குள் 2200 பேரை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.