புதன், 16 நவம்பர், 2022

இரவிலும் பகலிலும் நடக்கும் அமெரிக்க ராணுவ தளத்தில் விமானப் பயிற்சிக்கு தடை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் உள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் 
செயல்பட்டு வருகிறது. 
இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு
 தொடர்ந்துள்ளனர். 
அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஒலி மாசுபாட்டிற்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் அவர்கள் அளித்த புகார் மனுவில் 
கூறப்பட்டுள்ளது. 
இந்த ராணுவ தளத்தைச் சுற்றி சுமார் 5 முதல் 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ராணுவ தளத்தில் விமானங்கள் மூலம் ஏற்படும் இறைச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள், குறிப்பாக வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் 
தெரிவித்துள்ளனர். 
ஜப்பானில் செயல்பட்டு வரும் இந்த யோகோடா ராணுவ தளத்திற்கு எதிராக கடந்த 1976-ம் ஆண்டிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
அதனை தொடர்ந்து பல முறை வழக்குகள் தொடரப்பட்டதாகவும், தற்போது 14வது முறையாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.