நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும், குழுக்களும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துமாறு, தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை
முன்வைத்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,15-11-2022. இன்று செவ்வாய்க்கிழமை காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று கடிதம் ஒன்றை
கையளித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் காங்கிரஸ், உத்தர லங்கா சபை, ஜனநாயக இடதுசாரி முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான சுயேச்சைக் குழு, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முற்போக்கு கூட்டணி, நவ சமசமாஜ கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத முன்னிலை சோசலிஸக் கட்சி ஆகியவை இந்த கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தமது கூட்டுக் கோரிக்கைக்கு பதில் கிடைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில்
எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக