இலங்கையில்
O/L Pass என்பது 6 S ஆகும் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியும் இதுவாகும் ஒரு மாணவன் 6S பெற்றால் கணிதம் W எனில்
அடுத்துவரும் 2 ஆண்டுகளுக்கிடையில் கணித பாடத்தில் S எடுத்தால் O/L Pass என்ற தகுதியினைப் பெறுவார் O/L 6 பாடம் Pass தமிழ் பாடம் W எனில் அடுத்து வரும் 1 வருடத்துக்கிடையில் O/L பரீட்சையில் S பெற்றால் அ
ம் மாணவன் O/L Pass இம் மாணவர்கள் பாடசாலையில் Vocational Stream இல்
O/L எல்லாப்பாடங்களிலும் W என்றாலும் கற்க முடியும் மாறாக 6 S எடுத்தாலும் ஏனைய Stream இல் கற்க முடியாது.
பாடசாலைகளில் இணைந்து A/L கற்பதற்கான நிபந்தனைகள் என்ன?
1. எந்த Stream இலும் கற்பதற்கான குறைந்த பட்ச நிபந்தனை O/L பரீட்சையில் 3 C உம் 3 S உம் ஆகும் இதில் கணிதமும் தமிழும் W இல்லாதிருத்தல் வேண்டும்.
2. Bio கற்பதாயின் கணிதம் தமிழ் உட்பட 3 C உம் 3 S உடன் விஞ்ஞான பாடத்தில் C அவசியமாகும்.
3. Maths கற்பதாயின் 3C, 3S உடன் கணித பாடத்தில் C அவசியமாகும் விஞ்ஞான பாடத்தில் S அவசியமாகும்.
4. Commerce கற்பதாயின் 3C, 3S உடன் அந்த C சித்தியில் வர்த்தகப் பாடம் அல்லது முயற்சியாண்மைக் கற்கை அல்லது கணிதம் அல்லது வரலாறு பாடத்தில் C அவசியமாகும்.
5. Arts கற்பதாயின் 3C, 3S அவசியமாகும் அல்லது கணிதம் தமிழ் Pass பண்ணி 2 C 4 S இருந்தால் 3 வது C இற்காக SBA இல் கணிதம் தமிழ் தவிர்ந்த ஏனைய S எடுத்த பாடத்தில் 3 இருந்தால் கலைப் பிரிவில் கற்க முடியும். எப்பாடத்தினையும் எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இடாப்பில் பெயரினை எழுதி A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பம்
செய்ய முடியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக