வெள்ளி, 18 நவம்பர், 2022

மாணவர்கள் மீது கொழும்பில் பொலிஸாரால் கண்ணீர் புகை வீச்சு

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்கும் வகையில், பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகம்
 நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரை தடாகத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்தே பொலிஸார் இந்த கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு பிளவர் வீதியிலும் பொலிஸார்
 போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்
 நடத்தியுள்ளனர். 
அத்தோடு, மாணவர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 
மாணவர் பேரவையின்
 அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.