இலங்கை களுத்துறை தெற்கில் சில காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்துள்ளதுடன் 1,299 போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், களுத்துறையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதுடன், மாவனெல்லையில் நிரந்தர வதிவிடமாக உள்ளதாகவும்
தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக