சனி, 12 நவம்பர், 2022

தனது கல்லீரலை இத்தாலியில் இறந்த பின் தானம் செய்த 100 வயது மூதாட்டி

இத்தாலியில் 100 வயது மூதாட்டி கல்லீரலை தானம் செய்த நிலையில், அவரது கல்லீரல் மற்றொரு நோயாளிக்கு வெற்றிகரமாக 
மாற்றப்பட்டுள்ளது.
அதேசமயம் முதிர்ந்த வயது கொண்ட ஒருவரிடம் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே 
முதல்முறை ஆகும்.
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்படுவதற்குச் சற்று முன்பே உறுப்பு தானம் செய்யவிருந்த முதாட்டி 
உயிர் இழந்தார்.
இதனையடுத்து உறுப்பு தானத்துக்காகக் காத்திருந்த ஒருவருக்கு அவரது கல்லீரல் வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு உறுப்பு தானம் வழங்கியவர்களில் ஆக முதியவர்களுக்கு வயது 97 ஆக உள்ளது. இந்த நிலையில் நூறு வயது மூதாட்டி உறுப்பு தானம் செய்த ஆக முதியவர் எனும் சாதனையைப் 
படைத்துள்ளார்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.