ஐந்து இலங்கை குடியேற்றவாசிகளின் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கான கோரிக்கையினை அந்நாட்டு நிர்வாக நீதிமன்றம் ஒன்று
நிராகரித்துள்ளது.
கடந்த 31 ஆம் திகதி இவர்களின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன் காத்திருப்பு பகுதியில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் 8 புலம்பெயர்வோர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஐந்து இலங்கை குடியேற்றவாசிகளின் பிரான்ஸ் எல்லைக்குள் நுழைவதற்கான கோரிக்கையினை நிர்வாக நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை நிராகரித்தது.
இந்தநிலையில் குறித்த அனைவரும் மிக விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஐந்து பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது தாம் அனைவரும் நாடு திரும்பினால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.
எனினும் அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம்
நிராகரித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக